அதிமுக கூட்டணியில் இணைந்தார் வாசன்! ஒரே ஒரு தொகுதிதான்!

அதிமுக கூட்டணியில் 7வது கட்சியாக வாசன் இணைந்துள்ளார். அவருக்கு தஞ்சை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.


அதிமுக கூட்டணியில் இன்று ஜி.கே.வாசன் முறைப்படி இணைந்தார். நேற்றே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று சென்னை கிரவுன் பிளாசா ஓட்டலுக்கு வாசன் வந்தார்.

அவரை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் வருகை தந்தனர். இதனை தொடர்ந்து கூட்டணி ஒப்பந்தத்தில் வாசன் கையெழுத்திட்டார்.

அதிமுககூட்டணியில் வாசனுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தஞ்சை தொகுதியில் தமாகா வேட்பாளர் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

ஏற்கனவே பாமக, பாஜக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, தேமுதிக ஆகிய கட்சிகள் அதிமுக கூட்டணியில் உள்ளன. இந்த நிலையில் 7வது கட்சியாக வாசன் இணைந்துள்ளார்.