கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா! மேலும் 4 மாவட்டங்களை இழுத்து மூட முடிவு! எந்தெந்த மாவட்டம் தெரியுமா?

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் மேலும் புதிதாக 4 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது பற்றி ஆலோசனை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


கடந்த மார்ச் மாத இறுதியில் கொரோனாவால் தொடங்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு வரும் ஜூன் மாதம் 30 ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டே வருவதால் பாதிப்புகள் அதிகமாக இருக்கும் சென்னை, காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே முழு ஊரடங்கு உத்தரவு கடந்த சில தினங்களுக்கு முன்பு இருந்து அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக மேலும் 4 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்க ஆலோசனை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மதுரை ,வேலூர், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் முழு ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பாக நிர்வாகிகளுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை மதுரையில் 705 பேரும், வேலூரில் 477 பேரும், ராணிப்பேட்டையில் 470 பேரும், திருவண்ணாமலையில் 1060 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது