தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வின்றி ஆல் பாஸ்! முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் தேர்வின்றி ஆல் பாஸ் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.


சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது உலகமெங்கிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் தற்போது 500க்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதன் காரணமாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை இதுவரை 15க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸினால் பாதிக்கப் பட்டுள்ளனர். இவர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தமிழ்நாட்டில் பரவுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி பாஸ் என்ற அறிவிப்பை அறிவித்துள்ளார். இந்த செய்தி பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.