படுபயங்கர பனிமூட்டம்! நடுரோட்டில் நின்ற டிரக்..! அதிவேகத்தில் வந்து சடன் பிரேக் போட்ட அரசு பஸ்..! தடுப்பில் மோதி கவிழ்ந்த பயங்கரம்!

படுபயங்கர பனிமூட்டம்! நடுரோட்டில் நின்ற டிரக்..! அதிவேகத்தில் வந்து சடன் பிரேக் போட்ட அரசு பஸ்..! தடுப்பில் மோதி கவிழ்ந்த பயங்கரம்!


உத்திர பிரதேசத்தில் நின்றுக்கொண்டிருந்த லாரியின் மீது வேகமாக சென்ற அரசு பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் பலியாண சம்பவம் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேச மாநில அரசு பேருந்து ஆக்ராவில் இருந்து லக்னோவிற்க்கு சுமார்40 க்கும் மேற்பட்ட பயணிகள் உடன் புறபட்டது.இந்த நிலையில் பனி கூட்டம் அளவுக்கு அதிகமாக உள்ளதால் எதிரில் நிற்பவர் கூட தெரியாத அளவிற்க்கு அதிகமாக இருந்துள்ளது.

இதற்கிடையில் பஞ்சராகி சாலையில் நின்று கொண்டு இருந்த லாரியை கவனிக்காமல் அரசு பேருந்து டிரைவர் வேகமாக செல்ல,எதிர்ப்பாராத விதமாக நின்று கொண்டு இருந்த லாரி மீது மோதிய அரசு பேருந்து நிலை தடுமாறி அங்கிருந்த சுவரில் மோதி பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது.

இந்த பயங்கர விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானதை அடுத்து மேலும் படு காயங்களுடன் 16 பேர் அரசு மருத்துவ மனையில், மேல் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த டிரைவர் தன்னால் முடிந்த அளவிற்க்கு விபத்து நேராமல தடுக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது