பிரன்ட்ஷிப் டே ஸ்பெசல்! நண்பர்கள் தினம் ஏன்? எதற்கு? எப்படி? தோன்றியது தெரியுமா?

இந்த உலகில் எத்தனை உறவுகள் இருந்தாலும் எப்போதுமே நட்பு என்பதற்கு ஒரு தனி மதிப்பு நம் அனைவரிடமும் உள்ளது.


நட்பிற்கு மட்டும் தான் இந்த ஜாதி, மத, பேதமும் இல்லாமல் இருக்க கூடிய தனி சிறப்பு உண்டு. இத்தகைய நட்பை கொண்டாடும் வகையில் அமைக்கப்பட்டதுதான் நண்பர்கள் தினம். 

இது ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த வகையில் இந்த ஆண்டு வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.

இத்தகைய சிறப்புமிக்க நண்பர்கள் தினம் எப்படி உருவானது என்ற வரலாற்றை பார்ப்போம்..

முதன்முதலில் நண்பர்கள் தினத்தை  உருவாக்கியவர் அமெரிக்காவை சேர்ந்த ஜாய்ஸ் ஹால் என்பவர்தான்.

இதனையடுத்து அமெரிக்காவில் நண்பர்கள் தினம் பெரிய வரவேற்ப்பை பெற்றது. ஆகையால் அப்போது ஐக்கிய நாடுகள் சபையின் தலைவராக இருந்த கோஃபி அன்னன் அவர்களின் மனைவி நானே அன்னன் நண்பர்கள் தினம் பற்றிய முறையான அறிவிப்பினை வெளியிட்டார்.

1935ஆம் ஆண்டு நட்பு தினம் பற்றிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு முதல் ஞாயிற்றுக்கிழமை  விடுமுறை அறிவித்து, அன்றைய தினத்தை நட்பு தினமாகக் கொண்டாட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. அன்று முதல் அமெரிக்காவில் நட்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 

இதை போல் நம் நாட்டிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பர்கள் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

இதே மாதிரி இந்த ஆண்டும் உலகெங்கும் பரவியிருக்கும்  நம் நண்பர்களுடன் கோலாகலமாக நம்முடைய நண்பர்கள் தினத்தை கொண்டாடுவோம்.