கைக்கு எட்டும் தூரத்தில் உயிருக்கு போராடிய நண்பன்..! காப்பாற்றாமல் செல்ஃபி வீடியோ எடுத்த இளைஞன்! பிறகு நேர்ந்த பரிதாபம்!

கல்குவாரிக்குள் சிக்கிய நண்பனை காப்பாற்ற முயலாமல் இளைஞர் ஒருவர் வீடியோ எடுத்த சம்பவமானது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடகா மாநிலத்தில் ஜப்ரபாத் என்ற இடம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் மிகவும் ஆழமான கல்குவாரி ஒன்று அமைந்துள்ளது. இங்கு ஜாஃபர் என்பவர் தன்னுடைய 3 நண்பர்களுடன் சென்றுள்ளார். வார இறுதி நாளை கொண்டாடுவதற்காக அனைவரும் நன்றாக குடித்து விட்டு அங்கு சென்றுள்ளனர்.

ஒவ்வொருவராக கல்குவாரியில் குளிக்க சென்றுள்ளனர். மற்ற 2 நண்பர்களும் குளித்துவிட்டு கரை திரும்பிவிட்டனர். ஆனால் அதிகளவில் குடித்த காரணமாக அசதியான ஜாஃபர் கல்குவாரி குட்டையில் இருந்து வெளியே வர இயலாமல் தவித்து கொண்டிருந்தார். 

அப்போது அவருடைய நண்பர்கள் எவ்வளவு நேரம் மூச்சை அடக்க இயலும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஜாஃபர் கொஞ்சம் கொஞ்சமாக நீரில் மூழ்க தொடங்கியுள்ளார். இதனை அறியாத அவருடைய நண்பர்கள் வேடிக்கை பார்த்து கொண்டும், செல்போனில் படம் எடுத்து கொண்டும் இருந்துள்ளனர். நெடுநேரமாகியும் ஜாஃபர் வெளியே வராததால் அவருடைய நண்பர்கள் அவர் இறந்துவிட்டதாக சந்தேகித்தனர்.

உடனடியாக நண்பர்கள் அப்பகுதி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் ஜாஃபரின் சடலத்தை மீட்டு எடுத்தனர். நண்பர்களிடம் விசாரணை நடத்தியதில் மூச்சை அடக்கி கொண்டு இருப்பதாக நினைத்து இருந்ததாக கூறியுள்ளனர். 

இந்த சம்பவமானது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.