டெல்லி முழுவதும் இலவச வை-ஃபை கனெக்ஷன் அளிக்கப்பட உள்ளதாக டெல்லியில் முதலமைச்சரான அரவிந்த் கேஜரிவால் நம்பிக்கையளித்துள்ளார்.
11 ஆயிரம் இடங்களில் ஹாட்ஸ்பாட்! மாதம் 15ஜிபி டேட்டா இலவசம்! முதலமைச்சரின் இனிப்பான அறிவிப்பு!
2015-ஆம் ஆண்டில் டெல்லியில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அப்போது அரவிந்த் கேஜ்ரிவால் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். அவற்றுள் டெல்லி முழுவதும் இலவச வை-பை கனெக்ஷன்களை அளிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார்.
இதனை 3 அல்லது 4 மாதங்களுக்குள் நிறைவேற்ற போவதாக இன்று அறிவித்துள்ளார். அதாவது, டெல்லி மாநகர் முழுவதும் 11,000 இலவச ஹாட்ஸ்பாட்களை அமைக்க போவதாக கூறியுள்ளார். அவற்றுள் 4,000 பேருந்து நிலையங்களிலும், மீதமுள்ள 7,000 சட்டப்பேரவை தொகுதிகளிலும் அமைக்கப்பட போவதாக உறுதி அளித்துள்ளார்.
ஒவ்வொரு மக்களுக்கும் மாதமொன்றிற்கு 15 ஜிபி இலவச டேட்டா அளிக்கப்பட போவதாகவும், அதனை 200 எம்.பி.பி.எஸ் வேகத்தில் அளிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் டெல்லி மாநில மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பதவிக்காலம் அடுத்த மாதம் பிப்ரவரி மாதத்தில் முடிவடைய போவது குறிப்பிடத்தக்கது.