கொரோனா வைரஸ் தாக்கத்தை குறைப்பதற்கு பிரான்ஸ் நாட்டின் பேராசிரியர் ஒருவர் தடுப்பு மருந்து கண்டுபிடித்திருப்பது உலக மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடித்த பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்..! உலகையே அசர வைத்த முன்னேற்றம்!

கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 14,500-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 3,35,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நோயை தடுப்பதற்கான ஆராய்ச்சிகள் ரஷ்யா, பிரான்ஸ், சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் இயங்கிவரும் ஐ.ஹெச்.யூ ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த பேராசிரியரான "டிடியர் ரௌல்ட்" இந்த தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.
அந்நாட்டின் நைஸ் மற்றும் அவிஞ்னான் ஆகிய நகரங்களை சேர்ந்த 24 நோயாளிகளுக்கு மலேரியா நோயை கட்டுப்படுத்தும் ஹைட்ரோகுளோரோகுயினைன் (Hydrochloroqunine) மற்றும் மற்றொரு மருந்தான ப்ளேகுயினைன் (Plaqunine) ஆகியவற்றை செலுத்தியுள்ளனர். இந்த மருந்து கலவையை செலுத்திய பின்னர் நோயாளிகள் வெகு விரைவில் குணமடைய தொடங்கியுள்ளனர்.
நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மருந்து கலவையை தவிர்ப்பு பிறவற்றை கொடுத்தபோது நோய்தொற்று பரப்புவதற்கான வாய்ப்புகள் 6 நாட்களுக்குப் பிறகும் நோயாளிகளிடம் தென்பட்டுள்ளன. ஆனால் இந்த மருந்து கலவையை உபயோகித்த பின்னர் இந்த தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் 75% குறைந்துள்ளதாக தெரியவருகிறது.
ஏற்கனவே சீன நாட்டு ஆராய்ச்சியில் இந்த மருந்து கலவை ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எச்.ஐ.வி நோயை குணப்படுத்த உதவும் "கலேட்ரா" என்ற மருந்தும் ஆராய்ச்சியில் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கண்டுபிடிப்பு உலக மக்கள் அனைவருக்கும் பெரிதளவில் பலனளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.