ஒரே பைக்கில் 4 பேர்! படுவேகத்தில் மரத்தின் மீது சொருகிய பயங்கரம்! 2 பேர் பலி! பிறகு நேர்ந்த கொடூரம்!

வாகனம் ஓட்டிச் செல்லும் போது மிகுந்த கவனம் தேவை. கவனம் சிறிது சிதறினாலும் அதன் விளைவுகள் மிகவும் ஆபத்தானதாக இருக்கக்கூடும். வாகனங்களில் டிரிபிள்ஸ், ஃபோர்ஸ் ஆகியவற்றில் செல்வது, எமனுக்கே சவால் விடுவதற்கு ஒப்பாகும்.


இதேபோன்று சென்னையில் 4 பேர் ஒரே வாகனத்தில் சென்ற போது, நிலை தடுமாறியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றிரவு சென்னை மயிலாப்பூரில் 4 பேர் ஒரே வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.  அந்த 4 பேர், வெங்கடேஷ் என்ற எலக்ட்ரிக்கல் சூப்பர்வைசர், விஷ்ணு என்ற டிக்கெட் பதிவாளர், பாரதிராஜா என்ற ஸ்ரீராம் சிட் ஃபண்ட் ஊழியரும், முத்து என்ற வேன் ஓட்டுநரும் ஆவர்.

இவர்கள் பாபநாசம் சிவன் சாலையில் இருந்து சாந்தோம் நெடுஞ்சாலையில் செல்ல முயன்றனர். அப்போது வாகனம் நிலை தடுமாறியதில் அந்த சாலையில் இருந்த ஒரு ஃபிளாட்டின் முன் புறத்தில் மோதியுள்ளனர். 

அதாவது, அந்த ஃபிளாட்டின் முன் புறத்திற்கும், அங்கிருந்த ஒரு மரத்திற்கும் இடையில் இருந்த குறுகிய சந்தில் சென்று மோதியுள்ளனர்.இதில் சம்பவ இடத்திலேயே வெங்கடேஷ் மற்றும் விஷ்ணு உயிரிழந்தனர். மற்ற இருவரும்  108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முழு போதையில் வாகனத்தில் வேகமாக சென்றால் என்ன நேரும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.