திமுக முன்னாள் அமைச்சர் செல்வராஜ் திருச்சியில் இன்று காலமானார்.
திமுக முன்னாள் அமைச்சர் செல்வராஜ் திடீர் மரணம்! அதிர்ச்சியில் தொண்டர்கள்!
திமுக முன்னாள் அமைச்சர் செல்வராஜ் பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தில் 1944 மே5ம் தேதி பிறந்தார். இன்ஜினியரான இவர் 1987 முதல் 1993வரை ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்தார். இவர் 1980–84 ஆண்டுகளில் திருச்சி தொகுதி திமுக எம்பியாக இருந்தார்.
மதிமுக ஆரம்பிக்கப்பட்ட போது அக்கட்சிக்கு சென்ற திமுக மாவட்ட செயலாளர்களில் செல்வராஜீம் ஒருவர். பின்னர் திமுகவில் சேர்ந்த அவர் 2006 ஆண்டு முசிறி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று தி.மு.க. அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக 2006 முதல் 2011வரை இருந்தார்.
இந்நிலையில் கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட செல்வராஜுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த செல்வராஜ், ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தார். இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுகாலமாக உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த வாரம் திருச்சி வந்த திமுக தலைவர் ஸ்டாலின் திருச்சியில் செல்வராஜ் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார். இந்நிலையில் இன்று மாலை 6.15 மணிக்கு செல்வராஜ் இயற்கை எய்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.