வீடு புகுந்து வெட்டி வீசப்பட்ட நெல்லை திமுக முன்னாள் மேயர் உமா! கணவன், வேலைக்கார பெண்ணும் கொடூர கொலை! நெல்லை பதற்றம்!

நெல்லை மாவட்டத்தில் முன்னாள் மேயரான திராவிட முன்னேற்றக் கழக கட்சியை சேர்ந்த உமா மகேஸ்வரி அவருடைய கணவருடன் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமானது நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1996-2001 திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் நெல்லை மாவட்டத்தின் மேயராக பணிபுரிந்தவர் உமா மகேஸ்வரி. இவர் நெல்லை மாவட்டத்திலுள்ள ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்தவர். இந்நிலையில் இவர் தனது கணவர் மற்றும் பணிப்பெண்ணுடன் இன்று மாலை நேரத்தில் ரெட்டியார்பாளையம் பகுதி வீட்டில் வசித்து வந்தார். 

முகமூடி அணிந்திருந்த 3 நபர்கள் மகேஸ்வரியின் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். மறைத்து வைத்திருந்த அரிவாளால் 3 பேரையும் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். கொலை செய்த பின்னர் மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர். 

சம்பவமறிந்து வந்த அக்கம் பக்கத்தினர் ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைக்கான காரணம் குறித்து தற்போது காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.

முன்னாள் மேயர் சொந்த இடத்திலேயே மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமானது நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.