அஜித் வீட்டில் வனத்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டு..! அதிர வைக்கும் காரணம்!

சென்னை திருவான்மியூரில் உள்ள தல அஜித்தின் வீட்டில் மூன்றடி மலைப் பாம்பை வைத்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.


சென்னை திருவான்மியூரில் நடிகர் அஜித்துக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது. நடிகர் அஜித்தின் உதவியாளராக சுரேஷ் சந்திரா மற்றும் நாசர் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து அஜித்துக்கு சொந்தமான வீட்டில் மூன்று அடி நீளமுடைய மலைப்பாம்பு வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் அஜித்தின் உதவியாளர்களான சுரேஷ் மற்றும் நாசர் ஆகிய இருவரும் மலைப்பாம்புக்கு நாள்தோறும் 3 லிருந்து 4 எலிகளை உணவாக தந்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த வேளச்சேரி வனத்துறை அதிகாரிகள் உடனடியாக நடிகர் அஜித்தின் பழைய வீட்டிலும் தற்போது அவர் வசித்து வரும் வீட்டிலும் தீவிர சோதனையை மேற்கொண்டுள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் இதனைப் பற்றிய விசாரணையை வனத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.