திருவண்ணாமலை மகா தீபக் குகையில் பல நாட்களாக மறைந்திருந்த சீனர்..! கண்டுபிடித்து அதிர்ந்த அதிகாரிகள்! பரபர ரிப்போர்ட்!

திருவண்ணாமலை மகாதீபம் குகையில் பல நாட்களாக மறைந்திருந்த சீன நாட்டை சேர்ந்த ஒருவரை வனத்துறையினர் கண்டுபிடித்து கொரோனா பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


உலகையே அச்சத்தில் ஆழ்த்தி வரும் ஒன்றாக கொரோனா வைரஸ் இருந்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து மக்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் தொற்று தற்போது உலகமெங்கும் உள்ள பல நாடுகளில் பரவி அதனுடைய கோர தாண்டவத்தை காட்டி வருகிறது.

இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக நம்முடைய அரசாங்கம் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் பின்புறத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றும் மலை அமைந்துள்ளது. பௌவுர்ணமி நாட்களில் இந்த மலையை சுற்றி தான் பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். ஊரடங்கு உத்தரவால் கிரிவலம் செல்வதற்கு தற்போது தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த மலைப்பகுதியில் ஆள் நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் மலையை சுற்றி சோதனைகளை நடத்தினர். சோதனையின் போது கந்தாஸ்ரமம் பகுதியில் அமைந்திருக்கும் குகையில் சீன நாட்டை சேர்ந்த ஒருவர் பதுங்கி இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

அவரை விசாரித்த பொழுது அவரது பெயர் யாங்யாஓர் (வயது 40) எனவும் அவர் சீன நாட்டை சேர்ந்தவர் எனவும் தெரியவந்தது. இவர் கடந்த 45 நாட்களுக்கு முன்பாக சீனாவில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் கடந்த 11 நாட்களாக இந்த மலைக் குகையில் மறைந்து இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலையிலிருந்து கண்டுபிடித்த சீனரை வனத்துறையினர் வெளிநாட்டினர் உதவி மையத்தில் கொண்டு சேர்த்தனர். பின்னர் அந்த நபர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அந்த நபரை கைப்பற்றி பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

ஏற்கனவே நம்முடைய நாடு கொரோனா அச்சத்தில் இருக்கும்பொழுது சீன நாட்டை சேர்ந்த ஒருவர் நம்முடைய தமிழ்நாட்டில் பல நாட்களாக பதுங்கி இருப்பது பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.