கண்காணிப்பை மீறி புலியைக் கொன்று தோல் கடத்தல்? எல்லைப் பகுதியில் சிக்கிய நால்வரிடம் வனத்துறை கிடுக்கிப்பிடி

கேரளா மாநிலத்திற்கு புலித்தோலை தேனி மாவட்டத்திலிருந்து 2 பேர் கடத்திய சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகம்-கேரளா எல்லை பகுதியில் புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு வாழும் புலிகள் சில வேட்டையாடப்படுவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகும். இதனை தடுப்பதற்காக 24 மணி நேரமும் காலத்தில் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சிவகாசியை சேர்ந்த நாராயணன் (71), கமுதியை சேர்ந்த சக்கரை(51), முருகன்(42) கொடைக்கானலை சேர்ந்த கருப்பையா(54) , மற்றும் திருநெல்வேலியை சேர்ந்த ரத்தினவேல்(50) ஆகியோர் குமுளியில் இருந்து கோட்டையம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தமிழகம்-கேரளா எல்லை பகுதியில் வனத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

4 பேரின் காரை மடக்கினர். அவர்களை துருவி துருவி விசாரித்த போது, பண்டி இருக்கும் புலித்தோல் ஏற்றி சென்று கொண்டிருந்தது காவல்துறையினர் கண்டுபிடித்தனர். மேலும் விசாரித்ததில், அவர்கள் கோட்டயத்தில் உள்ள ஒரு நபரிடம் புலித்தோலை விற்க சென்று கொண்டிருப்பதாக கூறியுள்ளனர். அப்பகுதி வனத்துறையின் மூத்த அதிகாரியான அஜிஸ் புலித்தோல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

புலித்தோல் கடத்தல் துறையை சார்ந்த அதிகாரிகள் சரணாலயத்தில் இருந்த புலி வேட்டையாடப்பட்டு இருக்குமோ என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். 

இந்த சம்பவமானது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.