அரசு வேலை! கை நிறைய சம்பளம்! ஆனால் பணியில் சேர்ந்த 20 நாளில் உயிரை மாய்த்துக் கொண்ட பெண் காவலர்! அதிர்ச்சி காரணம்!

பெண் வனக்காப்பாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் என்ற இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகே உள்ள பாச்சல் என்னும் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். ராஜசேகரின் வயது 50. இவருடைய மனைவியின் பெயர் மேரி அல்போன்சா. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இத்தம்பதியினருக்கு லாவண்யாதேவி என்ற 24 வயது மகளும், சங்கீதப்பிரியா என்ற 22 வயது மகளும், தமிழ்செல்வன் என்ற 19 வயது மகனும் உள்ளனர்.

திருவண்ணாமலை வனச்சரகத்தில் கன்னமடை தெற்கு என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் வனக்காப்பாளராக லாவண்யாதேவி 2-ஆம் தேதியன்று பதவியேற்றார். திருவண்ணாமலை நகரத்தில் உள்ள சின்னக்கடை தெருவிலுள்ள வனத்துறையினர் அலுவலக குடியிருப்பில் தங்கி வந்தார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் லாவண்யா தேவி தன்னுடைய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். விரைந்து வந்த காவல்துறையினர், லாவண்யாதேவியின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர்.

வனத்துறை அலுவலகம் குடியிருப்புக்குள் விரைந்து வந்து மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். 

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், லாவண்யா தேவிக்கு கல்லூரியில் படிக்கும் காலத்தில் காதல் ஏற்பட்டதாகவும், காதலருடன் சமீபகாலங்களில் கடுமையான சண்டைகள் ஏற்பட்டு வந்ததால் மனமுடைந்து போய் தற்கொலை செய்துகொண்டார் என்றும் கூறப்படுகிறது. 

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.