கோலிவுட் நடிகர் அஜித்குமார் 5 வருடத்திற்கு முன்னர் தனக்கு வாழ்த்து கூறியதை ரசிகை ஒருவர் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
5 வருடங்களுக்கு முன்பு இளம் ரசிகை எடுத்த அஜித் வீடியோ! தற்போது வெளியானதால் பரபரப்பு!
கோலிவுட் திரையுலகில் மிகப் பெரிய ஜாம்பவானாக அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் உருவெடுத்து வருகிறார். இவருடைய நற்பண்புகள் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளன. கோடான கோடி ரசிகர்கள் இவருடன் ஒரு புகைப்படம் எடுப்பதற்கும், 5 நிமிடங்கள் பேசுவதற்கும் தவமாய் தவமிருந்து வருகின்றனர்.
இந்நிலையில் அஜித் குமார் 5 வருடங்களுக்கு முன்னர் தனக்கு வாழ்த்து தெரிவித்த வீடியோவை பிரபல பாலிவுட் நடிகை அலிஷா அப்துல்லா சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இவரும் ஒரு பைக் ரேஸர் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் குமாருக்கு பைக்ரேஸ் என்றால் அளவு கடந்த பிரியம் என்பதை நாம் அறிவோம். 5 வருடங்களுக்கு முன்னால் மும்பை சென்றிருந்தபோது நடிகை அலிஷா அப்துல்லாவின் சூப்பர்பைக்கை ஓட்டி பார்த்துள்ளார்.
அதன் பின்னர் அஜித்குமார் அவரிடம், "வாழ்த்துக்கள். நன்றாக செய்யுங்கள். பத்திரமாக இருங்கள்" என்று கூறியுள்ளார். இந்த வீடியோவை அவர் இன்ஸ்டாகிராம் செயலியில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அல்டிமேட் ஸ்டாரின் நற்பண்புகளை எடுத்துரைக்கும் வகையிலும் இந்த வீடியோ அமைந்துள்ளது.