தீபாவளிக்காக உணவு பாதுகாப்பு துறை நடத்திய சோதனை!

தீபாவளி பண்டிகைக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் சுத்தமானதாகவும் நல்ல மூலப் பொருட்களின் மூலம் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரி கூறியுள்ளார்.


தீபாவளி பண்டிகைக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் சுத்தமானதாகவும் நல்ல மூலப் பொருட்களின் மூலம் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரி கூறியுள்ளார்.

தீபாவளி பண்டிகை என்றாலே நம் அனைவருக்கும் நினைவில் வருவது பட்டாசுகளும் இனிப்புகளும் தான். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்காக பிரத்தியேகமாக இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரிக்கும் பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளன. இவ்வாறாக செய்யப்படும் இனிப்பு வகைகள் மிகவும் சுத்தமானதாகவும் தரமானதாகவும் இருக்கவேண்டும் என்பதை உணவு பொருள் தயாரிக்கும் நிறுவனங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். 

நிறுவனங்கள் தங்களது பணிகளை சரியாக செய்கிறதா என்பதை உணவுத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் நாகை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரியான அன்பழகன் தீவிர ஆய்வில் ஈடுபட்டார். தீபாவளிக்காக தயார் செய்யும் பலகாரங்கள் சுத்தமான பொருட்களிலிருந்து செய்யப்படுகிறதா என்றும் தயாரிக்கப்படும் இடம் சுத்தமாக இருக்கிறதா எனவும் அதிகாரி அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார். மேலும் இனிப்பு கார வகைகளில் தேவை இல்லாமல் எந்தவித நிறமிகள் பயன்படுத்தக் கூடாது எனவும் அப்படியே பயன்படுத்தினாலும் அது அரசாங்கம் குறிப்பிட்ட அளவில் பயன்படுத்தி இருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். 

அதேபோல் இனிப்புகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய் , எண்ணெய், வெண்ணெய் போன்றவை நல்ல தரமானதாக இருக்க வேண்டும் . மேலும் காலாவதியான மூலப்பொருட்களை கொண்டு இனிப்பு மற்றும் கார வகைகளை செய்ய கூடாது எனவும் அறிவுறுத்தினார். இத்தகைய முறைகளில் இனிப்பு மற்றும் கார வகைகளை உருவாக்கி அதனை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உணவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் மாதிரி அளிக்கவேண்டும் . அதனை ஆராய்ந்து பார்த்து அந்த அதிகாரிகள் இதற்கு ஒப்புதல் வழங்கிய பின்பு தான் சந்தைக்கு விற்பனைக்கு செல்ல வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.