அபூர்வ பறக்கும் பாம்பு பறிமுதல்! வித்தை காட்டிய ஒரிசா இளைஞன் அதிர்ச்சி

பறக்கும் பாம்பினை வைத்து வித்தை காட்டிக்கொண்டிருந்தவரிடம் இருந்து வனத்துறை அதிகாரிகள் பாம்பை மீட்டெடுத்த சம்பவமானது ஒரிசா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


ஒரிசா மாநிலத்தின் தலைநகர் புவனேஸ்வர். புவனேஸ்வரின் பல இடங்களில் வித்தை காட்டும் இளைஞன் ஒருவர் பறக்கும் பாம்பினை வைத்திருந்தார். பறக்கும் பாம்பானது பாம்பின் அரிய வகைகளில் ஒன்று. 

பாம்பை வைத்து வித்தை காட்டும் இளைஞனைப் பற்றி பொதுமக்கள் வனத்துறை அதிகாரியிடம் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் நேரடியாகவே வித்தை காட்டுவதை கண்டனர். உடனே அவர்கள் இளைஞனின் கைகளில் இருந்த பாம்பை பிடித்தனர். இதனைக் கண்ட இளைஞன் பேரதிர்ச்சி அடைந்தார்.

இந்த சம்பவத்தைக் குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், "பாம்பை யாரும் தங்கள் வசம் வைத்திருக்க கூடாது. அது சட்டப்படி குற்றமாகும். அதனால்தான் இளைஞர் வைத்திருந்த பாம்பை நாங்கள் பறிமுதல் செய்தோம். தற்போது அந்த பாம்பை வனத்தில் விட திட்டமிட்டுள்ளோம்" என்று கூறினார்.

இந்த சம்பவமானது ஒரிசாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.