ஒரு பிரமாண்ட வீட்டின் உயரத்தில் பிரமாண்ட பாம்பு! காண்போரை கதற வைக்கும் வேகம்!

17 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டுள்ளது.


மலைபாம்புகள் ,பொதுவாக மிக நீளமாக வளரும் தன்மை கொண்டவை. இருந்தாலும்,  ஃபுளோரிடாவின் தெற்கே வன ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஒரு குழுவினர், 17 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பார்த்து வியப்படைந்துள்ளனர். சுமார் 5.2 மீட்டர் நீளமுள்ள இந்த மலைப்பாம்பு, ஒரு அடுக்குமாடி ஃபிளாட் குடியிருப்பின் உயரம் உள்ளதாகும்.  

இதனால், ஒரு பெரிய மானை ஒரே மூச்சில் விழுங்கிடமுடியும். இது ஒரு பெண் பாம்பாகும். அதன் வயிற்றில், 73 முட்டைகள் இருந்ததை, ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பர்மீய மலைப்பாம்பு வகையை சேர்ந்த இப்பாம்பு, கடந்த 1980ம் ஆண்டுகளுக்குப் பின், தெற்கு ஃபுளோரிடாவில் இப்போதுதான் வெளிப்பார்வைக்கு சிக்கியுள்ளது. இந்த இனம் அழிந்துவிட்டதாக, வன ஆய்வாளர்கள் கருதி வந்தனர். 

நன்கு வளர்ந்த முதலை, மான், முயல் உள்ளிட்ட எதையும் சாப்பிடக்கூடிய இந்த மலைப்பாம்பை கண்டுபிடித்தது, மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பதாக, வன ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதேசமயம்,  தெற்கு ஃபுளோரிடாவில், பாம்புகளின் ஆதிக்கம் அதிகளவில் உள்ளதால், அவற்றை வேட்டையாட ஃபுளோரிடா மாகாண அரசு நிதி உதவி அளிப்பதும் குறிப்பிடத்தக்கது.