விநாயகரின் ஐந்து கரங்கள் எதைக் குறிக்கின்றது தெரியுமா?

விநாயகர் பக்தர்களால் ஐங்கரன் விக்னேஸ்வரன் ஆனைமுகன் கஜமுகன் என்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறார்.


ஐங்கரன் என்ற பெயர் விநாயகரின் ஐந்து கைகளை குறிக்கிறது . விநாயகரின் ஒரு கரம் பாசத்தையும் படைத்தலையும் குறிக்கிறது எனவே விநாயகரே பிரம்மர் ஆகிறார் .

விநாயகரின் மற்றொரு கரம் தந்தத்தை ஏந்தி உள்ளது .எனவே விநாயகரே மகாவிஷ்ணு ஆகிறார் .விநாயகரின் அங்குசம் ஏந்திய கரம் அழித்தலை குறிக்கிறது .எனவே விநாயகர் ருத்ரர் ஆகிறார் .விநாயகரின் மோதகம் ஏந்திய கரம் அருளை குறிக்கிறது .

எனவே இவர் பரமேஸ்வரன் ஆகவும் கருதப்படுகிறார் .விநாயகரின் துதிக்கை ஏந்திய கரம் அனுக்கிரகத்தை குறிக்கிறது .இந்த காரணங்களினால் விநாயகர் அவர்கள் ஐங்கரன் என்று பக்தர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார் .