பழங்குடியில் பிறந்து 23 வயதில் நாடே திரும்பி பார்க்கும் வகையில் இளம் பெண் செய்த சாதனை!

பழங்குடியினத்தை சேர்ந்த முதல் பெண் விமானி என்ற பெருமையை ஒரிசா மாநிலத்தின் பெற்று இருப்பது அனைவரையும் மகிழ செய்துள்ளது.


ஒரிசா மாநிலத்தில் மால்கங்கிரி என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. மரினியாஸ் லக்ரா என்பவர் ஒரிசா மாநில காவல்துறையில் ஹவில்தாராக பணியாற்றிவருகிறார். அம்மாநிலத்தின் பழங்குடியினத்தை சேர்ந்தவர். இவருடைய மகளின் பெயர் அனுப்பிரியா. சிறுவயதிலிருந்தே அனுப்பிரியாவுக்கு விமானியாக வேண்டும் என்ற ஆசையிருந்தது.

முதலில் இன்ஜினியரிங் படிப்பை படிக்க தொடங்கிய அனுப்பிரியாவுக்கு விமான பணிப்பெண்ணாக வேண்டும் என்ற ஆசையினால் இன்ஜினியரிங் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். 

2012-ஆம் ஆண்டு முதல் விமான பயிற்சி மேற்கொண்டு வந்தார். 7 ஆண்டுகள் முழுவதுமாக பயிற்சியில் தேர்ச்சி பெற்ற இவர் தற்போது ஒரு தனியார் விமான நிறுவனத்தில் இணை விமானியாக பணியாற்றி வருகிறார். இன்னும் சற்று நாட்களில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதற்கான வாய்ப்பு கிட்டும்.

மேலும் நம் நாட்டிலேயே பழங்குடியினத்தை சேர்ந்த முதல் பணிப்பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். ஒடிசா மாநிலத்தின் முதலமைச்சரான நவீன் பட்நாயக் ட்விட்டர் மூலம் அனுப்பிரியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். "அர்ப்பணிப்பு விடாமுயற்சியால் சாதித்து காட்டியுள்ள அனுப்பிரியா அனைவருக்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறார்" என்று பாராட்டினார்.

இந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் அனைவரையும் மகிழ செய்துள்ளது