பெண்ணுக்கும் பெண்ணுக்கும் பிறந்த அழகிய ஆண் குழந்தை! அதிசயம் நிகழ்நதது எப்படி தெரியுமா?

பெண் ஓரினச்சேர்க்கையாளர் ஜோடி ஆண் குழந்தை பிறந்துள்ள சம்பவமானது பிரிட்டன் நாட்டில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பிரிட்டன் நாட்டில் உள்ள எசெக்ஸ் நகரில் கால்செஸ்டர் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இப்பகுதியில் ஸ்மித் மற்றும் டோனா ஜாஸ்மின் ஃபிரான்சிஸ் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இருவருக்குமிடையே நெருக்கம் ஏற்பட்டு பெண் ஓரினச்சேர்க்கையாளர்களாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இருவரும் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசையை அடைந்துள்ளனர். அதற்கேற்றவாறு பிரபல மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைகளை மேற்கொண்டனர். அப்போது நன்கொடையாக வாங்கப்பட்ட ஒரு ஆணின் விந்தணுவை ஜாஸ்மினின் கருப்பைக்குள் செலுத்தப்பட்டது. அதன்பின்னர் ஜாஸ்மினின் கருமுட்டைகள், ஸ்மித்தின் கருப்பைக்குள் செலுத்தப்பட்டது.

இதன் மூலம் இருவரது கருமுட்டை கொள்ளும் சேர்ந்தவாறு ஆணின் விந்தணுவுடன் இணைந்து, 2 மாதங்களுக்கு முன்னர் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

உலகில் அங்கீகரிக்கப்பட்ட பெண் ஓரினச் சேர்க்கையாளர் தம்பதியினருக்கு குழந்தை பிறந்துள்ளது இதுவே முதல் முறையாகும். இந்த சம்பவமானது பிரிட்டன் நாட்டில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.