தமிழகத்தில் கொரோனாவுக்கு முதல் உயிர் பலி..! நள்ளிரவில் பரபரப்பு..! எந்த ஊரில் தெரியுமா?

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


தமிழகத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் மதுரையில் கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 54 வயது முதியவர் உயிரிழந்தார். மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் அவர் உயிரிழந்துவிட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா நோய் தாக்கியிருந்தாலும் 54 வயது நபர் பல வருடங்களாக நுரையீரல் நோய்க்கும் சிகிச்சை பெற்று வந்ததாக விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும் அவரை காப்பாற்ற முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே கொரோனாவுக்கு முதல் நபர் மதுரையில் பலியாகியுள்ளதால் அந்த மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாகியுள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்த நபர் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடித்து மருத்துவ அதிகாரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.