தோண்டப்பட்ட குழிக்குள் இறங்கிய தீயணைப்பு வீரர்! சுர்ஜித் மீட்பு பணியில் இறுதிக்கட்டம்! திக்திக் நிமிடங்கள்!

சுர்ஜித்தின் நிலையை கண்டறிவதற்கு தீயணைப்புப் படை வீரர் ஒருவர் குழிக்குள் சென்றிருப்பது நடுக்காட்டுப்பட்டி கிராம மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை எனுமிடம் அமைந்துள்ளது. இங்கு நடுக்காட்டுப்பட்டி எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைந்துள்ளது.  இந்த கிணற்றுக்கு அருகே விளையாடி கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் தவறி விழுந்தது. காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 30 அடி ஆழத்தில் விழுந்த குழந்தை, தற்போது 100 அடி ஆழத்தை எட்டியுள்ளது. தொடர்ந்து 3-வது மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. குழந்தையை பாதுகாப்பாக மீட்பதற்கு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. இருப்பினும் அத்தகைய முயற்சிகளில் எந்தவித பலனும் கிடைக்காததால், புது வகையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கிணற்றுக்கு அருகில் குழி தோண்டப்பட்டு வந்தது. 45 அடைபட்டிருந்த குழிக்குள் படைவீரர் ஒருவர் சென்று மார்க் செய்துவிட்டு வெளியே வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பாறைகளை உடைக்கும் திறன் படைத்த போர்வெல்கள் மூலம் துளையிடப்பட்டு வருகிறது.

இந்த செய்தியானது நடுக்காட்டுப்பட்டி கிராம மக்களுக்கு எதிர்பார்ப்பை தந்துள்ளது.