திடீரென பற்றி எரிந்த பஸ்! குபுகுபு என வெளியேறிய புகை! திருச்செங்கோடு KSR கல்லூரிக்குள் விபரீதம்!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள தனியார் கல்லூரியில் திடீரென்று தீ பரவிய சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு கே.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரி என்ற தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் நேற்று காலை பேருந்துகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அங்கு பழுதடைந்திருந்த பேருந்தில் வெல்டிங் வேலை நடைபெற்றுக்கொண்டிருந்தது. வெல்டிங் பணி மேற்கொள்ளப்பட்டிருந்த இடத்திற்கு அருகே எரிபொருள் டேங்க் அமைந்திருந்தது. 

அப்போது திடீரென்று தீப்பொறிகள் எரிபொருள் டேங்க் மீது விழுந்துள்ளன. உடனடியாக தீ மளமளவென பரவ தொடங்கியது. இதனை கண்ட மாணவ-மாணவிகள் அலறியடித்து ஓட தொடங்கினர். கல்லூரி பணியாளர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். தீயணைப்பு படையினர் கல்லூரி வளாகத்திற்கு விரைந்து வந்து தீ அணைக்கும் முயற்சியில் இணைந்துக்கொண்டனர்.

அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த சம்பவமானது திருச்செங்கோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.