கோவில்பட்டியில் பற்றி எரிந்த சென்னை சில்க்ஸ் ஜவுளிக் கடை! தி நகரில் ஏற்பட்டதை மறந்து விட்டோமா!

கோவில்பட்டியில் உள்ள சென்னை சில்க்ஸ் ஷோரூமில் திடீரென இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.


கோவில்பட்டியில் உள்ள பிரதான சாலையில் அமைந்திருக்கும் சென்னைசில்க்ஸ் ஷோரூமில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முதலில் கட்டிடத்தின் ஒரு பகுதியில் மட்டும் பிடித்த லேசான தீ சற்று நேரத்தில் வேகமாக மற்ற தளங்களுக்கும் பரவ ஆரம்பித்தது. இதனால் கட்டிடம் முழுவதுமே புகை மூட்டமாக காணப்பட்டது.

தீ விபத்தைப் பற்றி அறிந்த தீயணைப்பு படையினர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மூன்று தீயணைக்கும் வண்டிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் சுமார் ரூபாய் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசமானதாக தெரிகிறது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை சில்க்ஸ் ஷோரூமில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.