பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீ..! 13 பேர் உடல் கருகி பலி! 21 பேர் உயிருக்கு போராட்டம்!

பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவமானது வங்காளதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


வங்காளதேசத்தின் தலைநகர் டாக்கா. இதற்கருகே கெரனியாகஞ்சு என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு முறையான அனுமதியின்றி பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்துள்ளது.இந்த தொழிற்சாலையில் எதிர்பாராவிதமாக நேற்று பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 13 பேர் பலியாகினர். மேலும் 21 பேர் படுகாயமடைந்தனர்.

சம்பவயிடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்து வந்து போர்க்கால அடிப்படையில் தீயை அணைப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்தனர். மேலும் தீயில் சிக்கி கொண்டவர்களை மீட்டெடுத்து மருத்துவமனையில் அனுமதித்தனர்.

முதற்கட்ட விசாரணையில் காஸ் லீக்கானதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதேபோன்ற தீ விபத்தானது பிப்ரவரி மாதத்திலும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

முறையின்றி இயங்கிவந்த பிளாஸ்டிக் தொழிற்சாலையை அரசாங்கம் மூடக்கோரி பொதுமக்கள் எவ்வளவு முறையிட்டும் எந்த ஒரு பலனும் கிடைக்காத நிலையில் இந்த துயர சம்பவம் அந்நாட்டையே உலுக்கியுள்ளது.