வீட்டையும் எழுதி வாங்கிட்டாங்க.. இப்போ படுக்கைக்கு கூப்டுறாங்க..! கோவையில் கதறிய இளம் பெண் மித்ரா! பதற வைக்கும் காரணம்!

வாங்கிய கடனுக்காக வீட்டை எழுதி வாங்கிய பைனான்சியரிடம் இருந்து மீட்டு தருமாறு பெண்ணொருவர் முறையிட்டு இருப்பது கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவையில் காளப்பட்டி என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு தனியார் பைனான்சியராக ராஜேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் அப்பகுதியில் வட்டிக்கு பணத்தை கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த மித்ரா என்ற பெண் தன்னுடைய சொந்த வீட்டை அடமானம் வைத்து 22 லட்சம் ரூபாயை ராஜேஷ்குமாரிடமிருந்து கடனாக பெற்றுள்ளார். அந்தப் பணத்தை வைத்து தன்னுடைய கல்வி கடனை முழுவதுமாக அடைத்து விட்டார்.

கூறியபடி 3 மாதங்களில் மித்ராவால் பத்திரத்தை திருப்பி கொள்ள இயலவில்லை. இதனை அடுத்து ராஜேஷ் அந்த வீட்டை பாண்டியராஜன் என்பவருக்கு விற்றுவிட்டார். இதையடுத்து பணத்தை வட்டியுடன் செலுத்தி விடுவதாக மித்ரா பலமுறை பாண்டியராஜனிடம் முறையிட்டுள்ளார்.

ஆனால் ராஜேஷ் மித்ராவை கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். மேலும், மித்ராவுக்கு பாலியல் ரீதியில் பல்வேறு கொடுமைகளை செய்து வந்துள்ளார். இதையடுத்து மித்ரா நேற்று காலை தன்னுடைய தாயாருடன் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்று நிகழ்ந்தவற்றை கோரி புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவமானது கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சிறிது நேரம் பதற்றத்தை ஏற்படுத்தியது.