விருது விழாவில் நடிகர், நடிகைகளுக்கு தண்ணீர் கொடுத்துக் கொண்டிருந்த பெண் ஒரே ஒரு புகைப்படம் மூலமாக உலகப் பிரபலம் ஆகியுள்ளார்.
ஒரே ஒரு புகைப்படம்! நடிகருக்கு தண்ணீர் கொடுத்த பெண் உலகப் பிரபலம் ஆனார்!
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும்
விழா நடைபெற்றது. இதில் உலகின் முன்னணி நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். ரெட் கார்ப்பெட்
எனப்படும் நிகழ்ச்சயில் நடிகர், நடிகைகள் ஒய்யாரமாக நடந்து வந்து தங்களின் உடை மற்றும்
அலங்காரத்தை போட்டோ கிராபர்களுக்கு காட்டி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
இப்படி வரும் நடிகர்
நடிகைகளுக்கு தாகம் எடுத்தால் தண்ணீர் கொடுக்க சில பெண்கள் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர்.
நடிகர்கள் கேட்கும் போது தண்ணீர் எடுத்துச் சென்று கொடுப்பது தான் அவர்களின் வேலை.
மேலும் தாங்களாக சென்று நடிகைகளிடம் தண்ணீர் வேண்டுமா என்று கேட்டு கொடுக்கவும் அந்த
பெண்கள் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர்.
இப்படி பல பெண்கள்
நடிகர் நடிகைகளுக்கு தண்ணீர் கொடுக்க பணியில் அமர்த்தப்பட்டிருந்தாலும், நடிகர் நடிகைகளை
புகைப்பட கலைஞர்கள் புகைப்படம் எடுத்து தள்ளிய போது ஒரே ஒரு பெண் மட்டும் அனைத்து புகைப்படங்களிலு
அட்டகாசமான சிரிப்புடன் இருந்தார். அந்த புகைப்படங்களில் நடிகர், நடிகைகளை விட அந்த
பெண் தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
நீல நிற உடையில்,
அற்புதமான ஹேர் ஸ்டையில் எப்போதும் சிரித்து முகத்துடன் சிறிது செக்சியான பார்வையுடன்
அந்த பெண் இருந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகின. முன்னணி நடிகர்
நடிகைகள் இருந்தாலும் அவர்களுடன் புகைப்படத்தில் எதேச்சையாக சிக்கிய அந்த பெண் தான்
அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். யார் அந்த பெண் என்று விசாரணைகள் நடைபெற்றன.
அப்போது தான் ரெட்
கார்பெட்டில் கலந்து கொள்ள வரும் பிரபலங்களுக்கு தண்ணீர் கொடுக்க கோல்டன் குளோப் விருது
வழங்கும் ஏற்பாட்டாளர்களால் பணியில் அமர்த்தப்பட்டவர் அந்த பெண் என்பது தெரியவந்தது.
அவரது பெயர் கெல்லத் சுத்பெர்ட் என்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. பிஜி நிறுவனத்தின்
தண்ணீர் பாட்டில்களை பிரபலங்களுக்கு விநியோகிப்பதால் அவர் பிஜி வாட்டர் கேர்ள் என்று
சமூக வலைதளங்களில் பிரபலமாகியுள்ளார்.
அமெரிக்காவில் மாடலிங்
நிறுவனத்தில் பணியாற்றும் கெல்லத், சினிமா வாய்ப்புக்காக ஏக்கத்தில் உள்ளார். இதனால்
தான் தண்ணீர் கொடுக்கும் வேலையாக இருந்தாலும் பரவாயில்லை என்று விருது வழங்கும் விழாவில்
அந்த வேலையை செய்து வந்துள்ளார். தற்போது புகைப்படங்கள் மூலம் உலக அளவில் பிரபலமான
கெல்லத் பல்வேறு தயாரிப்பாளர்களின் கவனத்திற்கும் சென்றுள்ளார்.
மேலும் மாடலிங்க
நிறுவனங்கள் பலவும் தங்கள் நிறுவன விளம்பரத்திற்கு கெல்லத்தை அழைக்க ஆரம்பித்துள்ளனர்.
ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் கெல்லத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் கிடுகிடுவென
உயர்ந்து வருகிறது.