அந்த சீனியர் நடிகை அந்த தொழில் செய்பவரா? நடிகர் சங்க வாட்ஸ்ஆப் குரூப்பில் துணை நடிகர் பஞ்சாயத்து..!

தென்னிந்திய நடிகர் சங்கம் வாட்ஸ்அப் குரூப்பில் நாடக நடிகர் வாசுதேவன் என்பவருக்கும் நடிகை ரஞ்சனி என்பவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


SIAA லைஃப் மெம்பர் என்ற வாட்ஸ்அப் குரூப்பில் தென்னிந்திய நடிகர் சங்கம் தேர்தலில் போட்டியிட்ட விஷால் அணி மற்றும் ஐசரி கணேஷ் அணிகளை சேர்ந்தவர்கள் எல்லோரும் இருக்கிறார்கள். சமீபத்தில் இந்த வாட்ஸ்அப் குரூப்பில் ஊரடங்கால் தங்களது வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நலிந்த கலைஞர்களுக்கு செய்த உதவிகளை பற்றி அந்த வாட்ஸ்அப் குரூப்பில் பதிவுகளை உறுப்பினர்கள் போட்டு வந்தனர்.

இந்நிலையில் நாடக நடிகர் வாசுதேவன் என்பவர் அவர் நாடகக் கலைஞர்களுக்கு செய்த உதவிகளை அந்த குரூப்பில் போட்டிருக்கிறார். உடனே முதல் மரியாதை ரஞ்சனி என்ற நடிகை யார் இவர் என்று அந்த குரூப்பில் கேள்வி கேட்டார். பின்னர் நன்றாக அவர் பி.ஆர் வொர்க் செய்ததாகவும் வாசுதேவன் குறித்து குறிப்பிட்டிருந்தார்.

நாடக கலைஞர் வாசுதேவனை பார்த்து யார் என்று அந்த நடிகை கேட்டதால் வாசுதேவன் மற்றும் சில நாடக நடிகர்கள் கோபம் அடைந்தனர். இதனால் வாசுதேவன் என்பவர் அந்த நடிகையின் கேள்விக்கு நாங்கள் நாடக நடிகர்கள். உங்கள் தொழில் வேறு என்று பேசிவிட பிரச்சனை பெரிதாக ஆரம்பித்தது. இதனால் அவருக்கு சிலர் ஆதரவாகவும் நடிகைக்கு சிலர் ஆதரவாகவும் பேசி இரவு பகல் என்றும் பாராமல் குரூப்பிலேயே சண்டை போட ஆரம்பித்தனர்.

நடிகை குட்டி பத்மினி மற்றும் நடிகர் மனோபாலா போன்ற சீனியர் நடிகர் நடிகைகள் பிரிவினை பேசாதீர்கள் என்று சொல்லிப் பார்த்தார்கள். எனினும் சண்டை நின்றபாடில்லை. இரண்டு தரப்பினருக்கும் பொதுவான சிலர் குரூப்பை விட்டு வெளியேறவும் செய்தனர்.

நாடகக் கலைஞர் வாசுதேவன் என்பவர் விஷால் தலைமையிலான கடந்த நிர்வாகத்தில் நியமன செயற்குழு உறுப்பினராக இருந்தவர். நடிகை ரஞ்சனி என்பவர் ஐசரி கணேஷ் தலைமையிலான அணியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பிரச்சனை குறித்து நாடக நடிகர் வாசுதேவன் கூறியதில், கடந்த 15 வருடமாக சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராக இருந்து வருகிறேன் பாண்டவர் அணி தேர்தலில் போட்டியிட்டபோது நானும் நடிகை ரஞ்சனியும் இணைந்தே தேர்தல் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறோம். அப்படி இருக்கும் நிலையில் நான் நாடக கலைஞர்களுக்கு செய்த உதவிகளை பற்றி வாட்ஸ்அப் குரூப்பில் போட்டேன். அப்போது நடிகை ரஞ்சனி நீங்கள் யார் என்று கேள்வி எழுப்பினார். சங்கத்தின் குரூப்பில் எப்படி வெளியால் இருக்க முடியும். இது கூட உங்களுக்கு தெரியலையா என்று நான் அவரைக் கேட்டேன் எனவும் அவர் கூறினார்.

எங்கள் தொழில் நாடகம் உங்கள் தொழில் சினிமா இரண்டும் வேறு வேறு என்ற அர்த்தத்தில்தான் நான் அந்தக் குரூப்பில் மெசேஜ் போட்டு இருந்தேன். உடனே அவர்கள் நீங்கள் தப்பாக பேசுகிறீர்கள் .உடனே என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் நான் வழக்கு தொடருவேன் என்றெல்லாம் பேசத் தொடங்கிவிட்டார்கள். நான் எந்த உள்நோக்கத்துடனும் பேசவில்லை. நீங்களாக பேச்சுக் கொடுத்து பிரச்சினையை பெரிதாக்குகிறீர்கள் வழக்கு போட வேண்டும் என்றால் போட்டுக் கொள்ளுங்கள் நான் அதை சந்திக்க தயாராக இருக்கிறேன் என நான் கூறிவிட்டேன் எனவும் அவர் கூறினார். இந்நிலையில் நாடக நடிகர் வாசுதேவன் நடிகை ரஞ்சனி மீது திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் தன்னை தரக்குறைவாக பேசியதாக கூறி புகார் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து நடிகை ரஞ்சனி கூறியதாவது: தொழில் என்ற வார்த்தைக்கு சினிமாவில் என்ன அர்த்தம் என்று அவருக்கு தெரியாதா? யார் என்று தெரியவில்லை என்று கேட்டதற்கு ஏன் அவர் இவ்வளவு வார்த்தை பேசுகிறார். நான் பாரதிராஜா மற்றும் திருலோகசந்தர் போன்ற ஜாம்பவான்கள் உடன் வேலை செய்திருக்கிறேன். யாரும் என்னிடம் இப்படி பேசியதில்லை. ஆகையால் நான் வழக்குப் போடுவது உறுதி எனவும் அவர் கூறினார்.அதுமட்டுமல்லாமல் சக நடிகைகளிடம் ஒருவர் தவறாக பேசும் போது அந்தக் குரூப்பில் அட்மின் களாக இருக்கும் கார்த்தி ,நாசர், விஷால் போன்ற யாரும் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தார்கள் எனவும் அவர் கோபமாகக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தென்னிந்திய திரைப்பட சங்கத்தில் மிகப்பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.