மறைந்த கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளான நேற்று ஆம்பூர் அருகே கருணாநிதி அவர்களின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்துவதில் திமுகவின் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் திமுகவினரே திமுகவின் கட்சி கொடியை கிழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக கொடியை திமுகவினரே கிழித்து எறிந்தனர்..! அடிதடியுடன் கலைஞர் பிறந்த நாள்..! மருத்துவமனையில் நிர்வாகிகள்! எங்கு தெரியுமா?

கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்த நாள் நேற்று தமிழகமெங்கும் அவரது தொண்டர்களால் கொண்டாடப்பட்டது. திருப்பூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள அரங்கல் துருகம் என்ற கிராமத்தில் கலைஞர் கருணாநிதி அவர்களின் படத்தை வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் கம்பத்தில் திமுகவின் கொடியையும் ஏற்றினர். அப்போது திமுக வின் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்ததால் இரு தரப்பிலும் கைகலப்பில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தில் திமுகவின் கிளைச் செயலாளர் பழனி என்பவருடைய மகன் பிரேம்குமாரை எதிர்தரப்பினரான மாவட்ட பிரதிநிதி முரளி என்பவரின் மனைவி மற்றும் தாய் ஆகியோர் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. முரளியின் தம்பி இளையராஜா என்பவர் கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்டிருந்த திமுகவின் கொடியை கிழித்தெறிந்தார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் காயம் ஏற்பட்டதாக கூறி இரு தரப்பிலிருந்தும் சிலர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த மோதல் சம்பவத்திற்கு காரணமான திமுகவின் இரு தரப்பினரும் எதிரெதிர் வீடுகளில் வசிக்கிறார்கள் எனவும் அவர்களது இரண்டு குடும்பங்களுக்கு இடையே இருந்த முன் விரோதம் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் விழாவில் மோதலாக உருவெடுத்தது என்றும் கூறப்படுகிறது. சம்பவம் அறிந்த ஆம்பூர் தொகுதி திமுக எம்எல்ஏ விஸ்வநாதன் அவர்கள் மோதலில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சென்று நேரில் பார்வையிட்டார்.
மேலும் அவர் மோதலுக்கு காரணமான ஒரு தரப்பினரை கடுமையாக கண்டித்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.