முதுகில் மோடி அரசின் சாதனை ஓவியம்..! பெண்களின் நவராத்திரி ஸ்பெசல் ஜாக்கெட்! எங்கு தெரியுமா?

மோடி அரசின் சாதனைகளை குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் உள்ள பெண்கள் தங்களது முதுகில் ஓவியமாக வரைந்து கொண்ட சம்பவம் வைரலாக பரவி வருகிறது .


இந்தியா முழுவதும் நவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் பகுதியில் நவராத்திரி விழாவை கொண்டாடும் வகையில், பெண்கள் சிலர் தங்களது முதுகில் வண்ண ஓவியங்களை வரைந்து கொண்டாடி வருகின்றனர்.

சமீபத்தில் இரண்டாவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி அரசின் சாதனைகளை எடுத்துரைக்கும் வகையில் சூரத் பகுதியில் உள்ள பெண்கள் சிலர் தங்களது முதுகில் மோடி அரசின் சாதனைத் திட்டங்களை ஓவியமாக வரைந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து இந்திய மக்களின் வரவேற்பை பெற்ற பிரதமர் மோடி அரசின் சாதனையையும் , உலகையே திரும்பிப் பார்க்க வைத்த சந்திராயன்-2 திட்டத்தின் சாதனைகளையும் , மேலும் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் சாதனைகளையும் விவரிக்கும் வகையில் ஓவியங்களை அந்தப் பெண்கள் தங்களின் முதுகில் வரைந்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .