கலைஞர் கருணாநிதி பற்றிய சுவாரஸ்யமான விஷயங்கள்! கருணாநிதி முதலாம் ஆண்டு நினைவு தின ஸ்பெஷல்!

கலைஞர் கருணாநிதி பற்றிய சுவாரசியமான சில தகவல்கள் இதோ!


மனசாட்சி உறங்கும் சமயத்தில்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது.” - இது கலைஞர் கருணாநிதி  அடிக்கடி மேற்கோள்காட்டிய வரிகள். திருவாரூருக்கு அண்மையில்  உள்ள திருக்குவளை என்னும் இடத்தில்  1924 ம் வருடம் ஜூன் 3 ம் தேதி அன்று, திரு . முத்துவேலருக்கும்  , திருமதி .அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார்.

கலைஞருக்கு பெரியநாயகம், சண்முகசுந்தரம் என இரு சகோதரிகள் இருந்தனர் . சண்முகசுந்தரம் அவர்களின்  மகன்கள்தான் முரசொலி மாறனும் முரசொலி செல்வமும். பெரியநாயகம் அம்மாளின் மகன் அமிர்தம் என்பவராவர் .

அழகிரிசாமி என்பவர் நீதிக்கட்சியின் ஒரு முக்கிய பதவியில் இருந்து வந்தவர் அவருடைய நட்பு கருணாநிதிக்கு கிடைத்ததால் தான் அவர் அரசியலில் வருமாறு சூழ்நிலை அமைந்தது. இதனால் கலைஞர் தன்னுடைய மகனுக்கு அழகிரிசாமியின் நினைவாக அழகிரி என்று பெயர் சூட்டினார்.

கருணாநிதி முதன் முதலில் பழனியப்பன் என்னும் நாடகத்தை திருவாரூர் பேபி டாக்கீஸில் அரங்கேற்றினார். 1947ல் வெளியான ராஜகுமாரி என்ற திரைப்படத்திற்கு தான் கருணாநிதி முதன்முதலாக வசனங்களை எழுதினார்.  இந்த படத்திற்கு ஹீரோவாக எம்ஜிஆர் நடித்திருந்தார் 

கருணாநிதி பத்து சமூக நாவல்களையும் 6 சரித்திர நாவல்களையும் எழுதியுள்ளார். கருணாநிதியை முதல் முதலில் ஆண்டவரே என்று அழைத்தவர் எம்ஜிஆர்தான். எம்ஜிஆருக்கு புரட்சித் தலைவர் என்று பெயர் சூட்டியவர் கலைஞர் கருணாநிதி தான்.

கலைஞர் கருணாநிதி இதுவரை போட்டியிட்ட 13 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளார்.ஐந்து முறை முதலமைச்சராகவும்  இருந்துள்ளார். தலைவர் கருணாநிதிக்கு முதன்முதலில் கலைஞர் என பட்டம் அளித்தவர் நடிகர் எம்.ஆர் .ராதா அவர்கள் தான் .

கலைஞர் கருணாநிதி தன்னுடைய 45வது வயதில் முதன் முதலாக தமிழக முதல்வராக பதவி ஏற்றார். கலைஞர் கருணாநிதிக்கு பொதுவாகவே அதிகாலையில் எழுந்த உடனே அனைத்து பத்திரிக்கைகளையும் படிக்கும் ஒரு பழக்கம் உள்ளது. இவ்வாறாக பத்திரிக்கை படித்த பின்பு அந்த பத்திரிகை அலுவலகங்களுக்கும் தொடர்பு கொண்டு பேசும் பழக்கமும் கொண்டவர்.

கருணாநிதி எப்போதும் தன்னுடைய மூளைதான் தனக்கு டைரி என கூறுவார் காரணம் அவர் அவ்வளவு ஞாபக சக்தி உடையவர். வீட்டில் உள்ள தனி நூலகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை வைத்திருந்தார்.

கலைஞர் கருணாநிதிக்கு கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் அதிகம் .