நடுரோடு! காலில் இருந்த செருப்பை கழட்டி இளைஞனை விளாசிய பெண் போலீஸ்! அதிர வைக்கும் காரணம்! எங்கு தெரியுமா?

கான்பூரில் பள்ளியில் படித்து வரும் மாணவிகளை ஈவ் டீசிங் செய்த ஒருவனை பெண் போலீஸ் சரமாரியாக தாக்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


கான்பூரில் இயங்கி வரும் பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவிகளை இளைஞர் ஒருவர் கேலியும் கிண்டலும் செய்து ஈவ்டீசிங்கில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்த மாணவிகள் பெரும் துயரத்துக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து அந்த சிறுமிகளை ஈவ்டீசிங் செய்த இளைஞரை பெண் போலீஸ் ஒருவர் சரமாரியாகக் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளியில் படித்து வரும் சிறுமிகளை ஈவ் டீஸிங் செய்த இளைஞரை அந்தப் பெண் போலீஸ் தன்னுடைய காலணிகளை கொண்டு சரமாரியாக தாக்க ஆரம்பித்தார். அந்த இளைஞரின் சட்டை காலரை பிடித்துக்கொண்டு குறைந்தபட்சம் 22 முறை தன்னுடைய காலணியை பயன்படுத்தி அந்த இளைஞரை பெண் போலீஸ் தாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அந்த நபரை பெண் போலீஸ் தாக்கியபோது, உங்கள் வீட்டில் பெண்கள் இல்லையா ? உனக்கு அம்மா.. தங்கை யாரும் இல்லையா? என சரமாரியாக கேள்வி எழுப்பினார். அந்தப் பெண் போலீஸ் இவ்வாறாக ஈவ்டீசிங் செய்த நபரை தாக்கியபோது அதை பார்த்த ஒரு சிலர் தங்களுடைய செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். தற்போது இந்த வீடியோ பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.