ரம்ஜான் மாதத்தில் அரை குறை ஆடையுடன் முஸ்லீம் நடிகை! வறுக்கும் நெட்டிசன்ஸ்!

பாத்திமா சனா ஷாயிக் ஹிந்தி திரைப்பட உலகில் வளர்ந்து வரும் நடிகை ஆவார். இவர் முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு கதா நாயகியாக "தங்கல்" திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனார்.


தொடர்ந்து ஹிந்தி சினிமாவில் வளர்ந்து வரும் நாயகியாக காட்சியளிக்கிறார்.  மேலும் இவர் சமூக வலிதளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியீடுவது வழக்கம்.

இவர் சமீபத்தில் வெளியீட்ட ஒரு புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  நடிகை பாத்திமா கையில் காபி கப் உடன் கார்டன் ஒன்றில் அமர்ந்து இருக்கிறார். அவரது முன் ஒரு தட்டில் பிரட் துண்டுகள், ஆம்ப்லேட் போன்ற  உணவு பொருள்கள் இருந்தன. இதனை புகைப்படமாக எடுத்து அதனை தனது இன்ஸ்டாங்க்ராம் பக்கத்தில் வெளியீட்டு இருந்தார் நடிகை பாத்திமா. மேலும் "இந்த உணவு என்னுடையது கிடையாது" என்றும் கேப்ஷனும் போட்டிருந்தார்.

இதனை பார்த்த இவரது ரசிகர்களில் ஒருவர் "ரம்ஜான் மாதத்தில் நீங்கள் இப்படிப்பட்ட புகைப்படங்களை போடலாமா ?" என்று கேட்டிருந்தார்.  அதற்கு நடிகை பாத்திமா, "பார்க்க பிடிக்கவில்லை என்றால் ஆன்லைன் வராதீர்கள் " என்று பதிலடி கொடுத்தார்.

மேலும் இவர் "பூத் போலீஸ்" என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடிகர் சைப் அலி கானுடன் இணைந்து நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.