8 ஆண்டுகளில் ஒரு முறை கூட விடுப்பு எடுக்காத தந்தை! மகன் இறந்ததை கூட வீடியோ காலிங்கில் பார்த்த அதிர்ச்சி சம்பவம்!

வேலையை முதன்மையாக கருதிய தந்தையின் மகன் இறந்த சம்பவமானது அமெரிக்காவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவில் ஸ்டார்மெண்ட் என்பவர் வசித்துவருகிறார். 2011-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் புத்தம் புதிய ஒரு நிறுவனத்தை தொடங்கினார். நிறுவனத்தின் மேம்பாட்டிற்காக தன்னுடைய முழு உழைப்பையும் அளித்தார். இவருடைய மனைவியின் பெயர் ஜெசிக்கா பிராண்டஸ். இத்தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

8 வருடங்களாக வேலை பார்த்து வந்தவர், ஒருமுறைகூட ஓரு வாரத்திற்கு அதிகமாக விடுப்பு எடுத்ததில்லை. தன்னுடைய முழு நேரத்தையும் நிறுவனத்தை மேம்படுத்துவதிலே செலவழித்தார். இதனால் இவருக்கு குடும்பத்துடன் ஏற்பட வேண்டிய அந்நியோன்யம் குறைந்துள்ளது.

இவரது 2 மகன்களில் ஒருவரது பெயர் வில்லி ஸ்டார்மெண்ட். இவருக்கு வலிப்பு நோய் இருந்துள்ளது. தினமும் தன்னுடைய மகன்களை அவர்களுடைய அறையில் சந்தித்த பின்னரே ஸ்டார்மென்ட் வேலைக்கு செல்வார். சம்பவத்தன்று தன் 2 மகன்களை சந்தித்து செல்வதற்கு அவருக்கு நேரம் கிடைக்கவில்லை.

அவர் வேலைக்கு செல்லதற்கு முன்னரே வில்லி வலிப்பு நோயில் உயிரிழந்துள்ளான். இதனை அறியாத தந்தை வேலைக்கு சென்றுள்ளார். வேலைக்கு சென்ற சில மணி நேரத்தில் தன்னுடைய மகன் இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக வீட்டிற்குச் சென்று தன்னுடைய மகனின் உடலை கட்டி பிடித்தவாறு அழுதுள்ளார். மேலும் தன்னைப் போன்று யாரும் குடும்பத்திற்காக நேரம் செலவழிக்காமல் இருக்காதீர்கள் என்று அறிவுரை அளித்துள்ளார்.

இந்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.