கல்யாணம் செய்யாமலேயே மகளுடன் குடும்பம் நடத்திய இளைஞன்! கண்டுபிடித்த தந்தை! பிறகு அரங்கேறிய பயங்கரம்!

மகளுடன் சேர்ந்து வாழ மறுத்த காதலனே ஆத்திரமடைந்த தந்தை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவமானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


சென்னையில் அம்பத்தூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இதனருகே அயப்பாக்கம் எனும் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். சக்திவேலுக்கு 23 வயது மதிக்கத்தக்க சக்திபிரியா என்ற மகள் உள்ளார். சக்திபிரியாவுக்கு ஃபேஸ்புக்கில் நிறைய ஃபாலோயர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவரின் பெயர் லாரன்ஸ். இவர் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர். அம்பத்தூர் ரயில்வே சாலையில் கணினி சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். 

மூன்று மாதங்களாக இருவரும் காதலித்து வந்தனர். இதற்கிடையே இவர்களின் காதல் சக்திபிரியாவின் குடும்பத்திற்கு தெரிந்துள்ளது. அவர்கள் சக்திபிரியாவை கண்டித்தனர். மேலும் காதலை விட்டு விடுமாறும் கூறியுள்ளனர். 

பெற்றோரின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரே வீட்டில் லிவிங் டுகெதராக ஒன்றாக வசித்து வந்தனர். 1 மாதத்திற்கு முன்பு சக்திபிரியாவுக்கும், லாரன்ஸுக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்தனர்.

தனிமையில் மகள் படும் வேதனையை பொறுக்க இயலாத சக்திவேல் லாரன்ஸின் கடைக்கு சென்றுள்ளார். மேலும் தன் மகளுடன் சேர்ந்து வாழுமாறு லாரன்சை சக்திவேல் வற்புறுத்தியுள்ளார். வாழ முடியாது என்று லாரன்ஸ் மறுத்ததால் ஆத்திரமடைந்த சக்திவேல் மறைத்து வைத்திருந்த அரிவாளால் லாரண்சை சரமாரியாக வெட்டியுள்ளார். 

கடையில் இருந்தோர் அலறியடித்து வெளியேறினர். மேலும் பொதுமக்கள் படுகாயம் அடைந்த லாரன்ஸ் காப்பாற்றிய அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். சக்திவேல்  அம்பத்தூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இந்த சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.