நான் வயசுக்கு வந்த பிறகு தான் அப்படி நடந்துகிறார்! அப்பா மீது பகீர் புகார் கூறிய மகள்!

பெற்ற மகளென்று கூட பாராமல் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு செய்து வந்த தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோயம்புத்தூர் மாவட்டத்தில் சுண்டபாளையம் என்னும் பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் 38 வயது கூலித் தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவருக்கு 12 வயதில் ஒரு மகளும் 10 வயதில் ஒரு மகனும் உள்ளார். 12 வயது மகள் அரசு பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார். 

சென்ற வாரம் அந்த குழந்தையின் பள்ளியில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. அந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர், அந்த பெண் தன் வகுப்பாசிரியரிடம் சென்று நிகழ்ச்சியில் கூறியவாறு தனக்கு தன் தந்தை பலமுறை செய்துள்ளார் என்று கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ந்த வகுப்பாசிரியர் பெண்ணின் தாயாரிடம் கூறியுள்ளார். தாய்க்கு இது பலத்த இடியாக அமைந்தது.

அப்பகுதியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தாய் மகளை அழைத்து சென்றார். நடந்த விவரங்களை அந்த சிறுமி காவல்துறையினரிடம் கூறினார். காவல்துறையினர் சிறுமியின் தந்தையை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையின் போது தனக்கு நேர்ந்த அவலத்தை அந்த சிறுமி கூறியுள்ளார்.

தனது தந்தை தன்னிடம் மிகவும் நன்றாக பாசமாக இருந்து வந்ததாக கூறிய சிறுமி தான் வயதுக்கு வந்த பிறகு தான் அவர் நடவடிக்கை மாற ஆரம்பித்ததாக கூறினார். முதலில் நான் வழக்கம் போல் தந்தை இப்படித்தான் இருப்பார்கள் என்று கருதினேன். ஆனால் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பிறகு தான் என் தந்தை என்னிடம் தவறாக நடப்பதை உணர்ந்து கொண்டேன் என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.