பெற்ற மகளை துண்டு துண்டாக்கி பார்சல் கட்டிய தந்தை! ஆட்டோவில் சரக்கு போல் கொண்டு சென்று வெறியாட்டம்! நெஞ்சை உலுக்கி எடுக்கும் காரணம்!

சொந்த மகளை கொலை செய்து உடலை துண்டாக்கி சூட்கேசில் தந்தை அடைத்து வைத்த சம்பவமானது உத்திரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஜானுப்பூர் மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு அரவிந்த் திவாரி என்ற 47 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 4 மகள்கள் உள்ளனர்.

வேலை நிமித்தமாக இவர் தன்னுடைய மூத்த மகளான பிரின்சியுடன் மும்பை மாநகரத்திற்கு இடம்பெயர்ந்துள்ளார். பிரின்சியின் வயது 22. இருவருக்கும் மும்பை மாநகரில் தனித்தனி இடங்களில் வேலை கிடைத்தது.

இதனிடையே பிரின்சி தன்னுடன் பணியாற்றி வந்த இளைஞர் ஒருவரை காதலித்துள்ளார். இதனை அறிந்த அரவிந்த் பிரின்சியை கண்டித்துள்ளார். ஆனாலும் தந்தையின் பேச்சை மதிக்காமல் பிரின்சி தொடர்ந்து காதலில் ஈடுபட்டு வந்துள்ளார். 

பிரின்சியின் காதலினால் அவருடைய தங்கைகளின் வாழ்க்கை வீணாகிவிடும் என்ற அச்சத்தில் இருந்த அரவிந்த் பிரின்சியை கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். அதன்படி அரவிந்த் பிரின்சி கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இறந்த பிறகு அவருடைய உடற்பாகங்களை வெட்டி சூட்கேசில் அடைத்துள்ளார்.

அதன் பின்னர் அங்கு சூட்கேசை ஆட்டோவில் ஏற்றி சென்றுள்ளார். அப்போது ஓட்டுநர் சூட்கேசில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அரவிந்திடம் முறையிட்டுள்ளார். உடனே அரவிந்த் சூட்கேசை வழியிலேயே போட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து அந்த ஆட்டோ ஓட்டுனர் அப்பகுதி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர்கள் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அவற்றின் மூலம் அரவிந்தின் புகைப்படத்தை கண்டு பிடித்த காவல்துறையினர் புகைப்படத்தின் உதவியோடு பல்வேறு விதங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இறுதியாக அரவிந்த் இருப்பிடத்தை காவல்துறையினர் கண்டறிந்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது தன் மகளை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

உடனடியாக காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரின்சியின் பாதி உடற்பாகங்கள் காணாததால் காவல்துறையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இந்த சம்பவமானது மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.