முதல் மனைவி விபத்தில் பலி! 2வது மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த மதுரை முத்து வீட்டில் அரங்கேறிய அடுத்த துக்கம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிரபல காமெடி நடிகரின் தந்தை வயது மூப்பினால் உயிரிழந்திருப்பது சின்னத்திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


10-15 வருடங்களுக்கு முன்னர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் "அசத்தப்போவது யாரு" என்ற காமெடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் மதுரை முத்து. அதன் பின்னர் "கலக்கப்போவது யாரு" என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

தற்போது இவர் காமெடி நிகழ்ச்சி ஒன்றுக்கு நடுவராக பணியாற்றி வருகிறார். மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் இவருடைய சொந்த வாழ்க்கை என்பது சோகமாகவே அமைந்துள்ளது. இவருடைய முதல் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்னர் சாலை விபத்தில் உயிரிழந்தார். அதன் பின்னர் 2-வதாக திருமணம் செய்து கொண்டார். சென்ற ஆண்டுதான் வயது மூப்பின் காரணமாக தாயை பறிகொடுத்தார். இவருடைய தந்தையின் பெயர் ராமசாமி. 

ராமசாமி வயது மூப்பின் காரணமாக 15-ஆம் தேதி அன்று இயற்கை எய்தினார். தற்போது மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் பிரபலங்களால் நேரில் சென்று துக்கம் அனுசரிக்க இயலவில்லை. ஆகையால் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மதுரை முத்துவுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

சில வாரங்களுக்கு முன்னர் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஊரடங்கில் அரங்கேற்றிய காமெடி வீடியோவை மதுரை முத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.