தெலங்கானா பாலியல் பலாத்காரம் வழக்கில் என்கவுண்டரில் கொலை செய்யப்பட்ட ஒருவரின் தந்தை உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கற்பழித்து கொன்றவர்களை பழிவாங்கும் பெண் டாக்டர் ஆவி? அடுத்தடுத்து அரங்கேறும் துர் மரணங்கள்!
தெலங்கானா மாநிலத்தில் சில வாரங்களுக்கு முன்னர் 26 வயதான பிரியங்கா ரெட்டி என்ற கால்நடை மருத்துவர், 4 லாரி ஓட்டுநர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவமானது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த வாரத்திலேயே 4 குற்றவாளிகளும் எண்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளில் ஒருவரின் பெயர் சின்னகேசவலு. இவருடைய மனைவியின் பெயர் ரேணுகா. சின்னகேசவலுவின் தந்தையின் பெயர் குர்மையா.
சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தில் குர்மையா மீது இனோவா கார் மோதியதில் படுகாயமடைந்தார். அவர் இருசக்கர வாகனத்தில் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. உடனடியாக ஹைதராபாத் மாநகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சில நாட்களுக்கு முன் அவரை உறவினர்கள் தங்களுடைய சொந்த கிராமத்திற்கு அழைத்து சென்றனர். ஆனால் நேற்று சிகிச்சை பலனின்றி குர்மையா உயிரிழந்து போனார்.
மூன்று நாட்களுக்கு முன்னர் ரேணுகாவுக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், மாமனாரின் உயிரிழப்பானது அந்த குடும்பத்தை பெரிதளவில் பாதித்துள்ளது. மேலும் இது பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் ஆவியின் வல்லமையால் கூட நேர்ந்திருக்ககூடும் என்று அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.