பெற்ற மகளை ஆபாசமாக புகைப்படம் எடுத்த தந்தை! அதிர வைக்கும் காரணம்!

பெங்களூரை சேர்ந்த ஒருவர் பிரிந்த தன் மனைவியை பழி வாங்குவதற்காக தன் மகளின் புகைப்படத்தை மார்பிங் செய்து திருமணம் நடப்பது போல் உருவாக்கி குழந்தை திருமண தடை பிரிவினரிடம் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பெங்களூரை சேர்ந்த தம்பதியினர் ஒருவர் திருமணம் நடந்து சில ஆண்டுகளிலேயே பிரிந்து வாழ ஆரம்பித்து விட்டனர். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ முடிவு எடுத்து தனியாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி தற்போது இரண்டு மகள்கள் உள்ளனர்.

அந்தப் பெண் தன்னுடைய இரண்டு மகள்களுடன் பெங்களூரில் உள்ள ஹால் என்ற இடத்தில் தனியாக வசித்து வருகிறார். அந்த நபர் தன்னுடைய மனைவியை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய மூத்த மகளுக்கு குழந்தை திருமணம் செய்து வைப்பதற்கு தன் மனைவி முடிவெடுத்திருப்பதாக கூறி புகைப்படம் ஒன்றை குழந்தைத் திருமணத் தடை பிரிவினரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் அளித்திருக்கிறார்.

அந்தப் புகாரை ஏற்றுக்கொண்ட அவர்கள் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அந்தப் புகைப்படத்தை காண்பித்து உங்களது மைனர் மகளை திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளீர்களா என்று அதிகாரிகள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். அந்த பெண் அதை கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்து புகைப்படத்தை பார்த்து அது உண்மையான புகைப்படமா அல்லது போலியானதா என்று யோசித்திருக்கிறார். கடைசியில் அது போலியானது என்று உறுதிசெய்யப்பட்டது.

இதனையடுத்து அதிகாரிகள் கணவன் மனைவி இருவரையும் கவுன்சிலிங் எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.