அவள் என் மகள்..! நான் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்துவேன்! தேடிச் சென்ற போலீஸ் மீது நாயை ஏவிய காமக் கொடூர தந்தை!

மகளை பாலியல் பலாத்காரம் செய்து வந்த தந்தையை கைது செய்ய சென்ற காவல்துறை அதிகாரியை நாய் துரத்திய சம்பவமானது வில்லிவாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை புறநகரான வில்லிவாக்கத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகள் உள்ளார். இவரா அவருடைய மகளும் தனியாக வசித்து வந்துள்ளனர். அப்போது இவர் மகளை வீட்டிற்குள் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த தகவல்கள் அரசல்புரசலாக காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது. அனைத்து மகளிர் காவல் துறையினர் பிரகாஷ் பிடிப்பதற்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர். காவல்துறையினர் தன்னை தேடுவது தெரிந்துகொண்ட பிரகாஷ் தலைமறைவாகி வந்தார்.

இதனிடையே நேற்று முன்தினம் அதிகாலையில் அவருடைய வீட்டின் வாசலில் கார் நின்று கொண்டிருந்ததை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். உடனடியாக அனைத்து மகளிர் காவல்துறையினர் பிரகாஷ் கையும் களவுமாக பிடிப்பதற்காக அவருடைய வீட்டிற்கு விரைந்து சென்றனர். 

பின்னர் வீட்டின் பின்பக்க படிக்கட்டு வழியாக மேலே சென்று பிரகாஷை கைது செய்ய முயற்சி செய்தனர். இதனை உணர்ந்த பிரகாஷ் கீழிருந்து தன்னுடைய வளர்ப்பு நாயை ஏவி விட்டு காவல்துறையினரை கட்டுப்படுத்தி வந்தார்.

இதனால் காவல்துறையினர் பிரகாஷ் கைது செய்ய இயலாமல் தவித்து வந்தனர். பின்னர் ஒருவழியாக தீயணைப்பு படை வீரர்களுக்கு தெரிவித்தனர்.

தீயணைப்பு படை வீரர்கள் பிரகாஷின் வீட்டிற்கு விரைந்து வந்தனர். வளர்ப்பு நாயின் கழுத்தில் சுருக்கு கயிறை மாட்டி நாயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் காவல்துறையினர் பிரகாஷை கைது செய்தனர். அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சம்பவமானது வில்லிவாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.