காய்ச்சல் மாத்திரைக்கு பதிலா தூக்க மாத்திரையை கொடுத்து என் அப்பாவே என்னை படுக்கை அறையில்..! 19 வயது மகள் கூறிய பகீர் தகவல்!

இளம்பெண் ஒருவருக்கு அவரது தந்தை காய்ச்சல் மாத்திரைக்கு பதிலா தூக்க மாத்திரையைக் அளித்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பெங்களூருவில் ஹரலூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் 19 வயது இளம் பெண் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இந்த இளம் பெண்ணுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தன்னுடைய காய்ச்சலுக்காக தந்தையிடம் காய்ச்சல் மாத்திரையை கேட்டிருக்கிறார். ஆனால் அவரது தந்தையோ காய்ச்சல் மாத்திரைக்கு பதிலா தூக்க மாத்திரையைக் தனது மகளுக்கு அளித்திருக்கிறார். தூக்க மாத்திரையை உட்கொண்ட அந்த இளம்பெண் மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

மயங்கிய நிலையில் இருந்த அந்த இளம்பெண்ணை தனது சொந்த மகள் என்றும் பாராமல் மிகவும் கடுமையான பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி உள்ளார் அவரது தந்தை. அந்த இளம் பெண் தன்னுடைய மயக்கம் தெளிந்து கண் விழித்து பார்த்த போது தான் தனக்கு என்ன நேர்ந்தது என்று தெரியவந்துள்ளது. இதனை அறிந்த அந்தப் இளம்பெண் மனம் நொந்துபோய் தனக்கு நேர்ந்த அநீதிகளை யாரிடம் சொல்வது என்று தெரியாமல் திக்குமுக்காடி போய் இருந்திருக்கிறார். இதனையடுத்து அந்த இளம் பெண் தன்னுடைய அப்பாவின் இரண்டாவது மனைவி யிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை பற்றி கூறியிருக்கிறார்.

இதனைக் கேட்ட அந்தப் பெண்ணின் சித்தி சரி விடு, இதைப் பற்றி வெளியே கூற வேண்டாம்.. என்று கூறி மழுப்பி இருக்கிறார். இதனால் மேலும் மனமுடைந்த அந்த இளம் பெண் தன்னுடைய வீட்டின் பாத்ரூமுக்குள் சென்று அங்கிருந்த கெமிக்கலை எடுத்துக் குடித்திருக்கிறார். அந்த கெமிக்கலை குடித்த கையோடு அந்த இளம்பெண் அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு சென்று தனக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றி புகாராக கூறியிருக்கிறார். இதனைக் கேட்ட போலீஸ் அதிகாரிகள் அந்தப் பெண்ணின் நிலையை அறிந்து பதறிப்போய் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவமனையில் அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து போலீசார் தன்னுடைய சொந்த மகளையே பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக் கொண்ட அவரது தந்தையை அதிரடியாக கைது செய்தனர். மேலும் இந்த செயலுக்கு அவரது இரண்டாவது மனைவியும் உடந்தையாக இருந்துள்ளாரா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர். மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அந்த இளம்பெண் கண்விழித்து வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று போலீசார் கூறியிருக்கின்றனர். பெற்ற தந்தையே தன்னுடைய மகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.