கொத்து கொத்தாக வீசப்பட்டு நச்சு குண்டு! துடிதுடித்து பலியான 3 குழந்தைகள்! பார்த்து கதறும் தந்தை! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

சிரியாவில் நடந்த தாக்குதலில் 3 குழந்தைகளை இழந்து கதறி அழும் தந்தையின் புகைப்படமானது சமூகவலைதளங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சிரியா நாட்டில் இட்லிப் எனும் நகரம் அமைந்துள்ளது. இங்கு வாழும் மக்கள் தனிநாடு வேண்டி போராடி வருகின்றனர். இதனை தகர்ப்பதற்காக ரஷ்ய நாட்டுடன் இணைந்து சிரியா அரசு இட்லிப் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. 3 மில்லியன் மக்கள் வாழும் இந்த பகுதியில் தொடர்ந்து பல்வேறு விதங்களில் தாக்குதல்களை சிரியா அரசு நடத்தி வருகிறது.

தங்கள் உயிர்களை காப்பாற்றி கொள்வதற்காக பலரும் தப்பி ஓடிவிட்டனர். இதனிடையே புதன்கிழமை நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் கிட்டத்தட்ட பதினாறு பேர் இறந்ததாக சிரியா அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இட்லிப் பகுதியிலுள்ள மாரெட்-அல்-நுமான் எனும் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் தன் மூன்று குழந்தைகளையும் இழந்து கதறி அழும் தந்தையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அப்பாவி பொதுமக்கள் ஒவ்வொரு தாக்குதல்களிலும் கொல்லப்பட்டு வருகின்றனர். ஆனால் ரஷ்யா மற்றும் சிரியா படைகள் கூறுகையில் அல்கொய்தா படைகளை ஒழிக்கவே கடுமையான முயற்சிகளை எடுத்து வருவதாக கூறுகின்றனர்.

இந்த தாக்குதலானது இட்லிப் நகரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.