பெற்ற மகளின் உடைகள், உள்ளாடைகளை களைந்து தந்தை செய்த பகீர்! நடுக்காட்டில் அரங்கேறிய பதைபதைப்பு சம்பவம்!

சொந்த மகளை நரபலி கொடுத்த தந்தை, மகள் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக நாடகமாடியுள்ள சம்பவமானது புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை என்ற இடம் அமைந்துள்ளது. கந்தர்வகோட்டைக்கு உட்பட்ட நொடியூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவியான இந்திராவுக்கு  4 குழந்தைகள், 2-வது மனைவியான மூக்காயிக்கு இரு குழந்தைகள் என மொத்தம் 6 குழந்தைகள் உள்ளன.  

மே-17 ஆம் தேதியன்று பன்னீர்செல்வத்தின் மூத்த மனைவிக்கு பிறந்த வித்யா என்ற பெண் உயிரிழந்துள்ளார். உடலில் ஒட்டுத்துணியின்றி சடலமாக சாலையோரத்தில் வீசப்பட்டார். சம்பவமறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மாணவியின் மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. அதாவது, மூத்த மனைவியின் குழந்தைகள்  யாராவது நரபலி கொடுக்கப்பட்டால் செல்வம் செழிக்கும் என்று பன்னீர்செல்வத்திடம் 2-வது மனைவியான மூக்காயி கூறியுள்ளார். மேலும் இதற்காக வசந்தி என்ற மந்திரவாதியை ஏற்பாடு செய்துள்ளதாகவும் பன்னீர்செல்வத்திடம் கூறியுள்ளார். 

உடனடியாக தண்ணீர் செல்லும் 16 -ஆம் தேதியன்று, விடிய விடிய காட்டுப்பகுதிக்குள் பூஜை நடத்தியுள்ளார். மறுநாள் காலையில் தண்ணீர் குடம் எடுக்க சென்ற வித்யாவிடம் உன்னுடன் தனியாக பேச வேண்டும் என்று கூறி காட்டுக்குள் அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்று வித்யாவை வலுக்கட்டாயமாக மந்திர வட்டத்திற்குள் அமர வைத்துள்ளார். பயந்து போன வித்யா தன் தாயாரிடம் கூறுவதற்காக அங்கிருந்து புறப்பட்டார்.

அப்போது ஆத்திரமடைந்த பன்னீர்செல்வம் தன் கையிலிருந்த துணியால் வித்யாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். கொலை நடந்த சம்பவத்தில் மூக்காயி மற்றும் மந்திரவாதி வசந்தி ஆகியோர் உடனிருந்துள்ளனர். வித்யா இறந்த பிறகு, அவருடைய உடலில் இருந்த ஆடைகளை அவிழ்த்து, உள்ளாடையை கிழித்தெறிந்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது போன்றிருக்க வேண்டும் என்று பன்னீர்செல்வம் நாடகமாடியுள்ளார்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் வித்தியா பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்பது உறுதியானது. அதன் பின்னர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் அவருடைய உடல்களில் தென்பட்டதால் காவல்துறையினர் பன்னீர்செல்வத்திடம் விசாரணை மேற்கொண்டனர்.

காவல்துறையினரின் கிடுக்கிப்பிடி விசாரணைக்கு ஈடுகொடுக்க முடியாமல் தன் மகளை தான் கொலை செய்ததாக காவல்துறையினரிடம் பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார். வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறையினர் பன்னீர்செல்வத்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

இந்த சம்பவமானது புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.