மனைவியுடன் மகனுக்கு தகாத உறவு! சந்தேக நபர் நள்ளிரவில் அரங்கேற்றிய பயங்கரம்!

நள்ளிரவில் பெற்ற மகனையே கத்தியால் குத்திக் கொன்ற கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர்.


சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். 50 வயதான இவர், பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு வேதவள்ளி என்ற மனைவியும், சதீஷ் (22 வயது) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், சக்திவேலுக்கு மனைவி வேதவள்ளியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதன்பேரில், அடிக்கடி வீட்டில் தகராறு செய்துவந்துள்ளார்.  இதில், மகன் சதீஷ், தனது தாய்க்கு ஆதரவாகப் பேசி வந்துள்ளார். நேற்றிரவு (மார்ச் 10) வழக்கம்போல, வீட்டுக்கு வந்த சக்திவேல், வேதவள்ளியுடன் சண்டையிட்டுள்ளார். அப்போது, மகன் சதீஷ், தாய்க்கு ஆதரவாகப்  பேசியதுடன், சக்திவேலை திட்டியுள்ளார்.

இதையடுத்து, சக்திவேலுக்கு கொலை வெறி ஏற்பட்டுள்ளது. நள்ளிரவு அனைவரும் உறங்கிய பின், அதிகாலை 3 மணியளவில் எழுந்த சக்திவேல், கத்தியை எடுத்து, தனது மகன் சதீஷ் மீது அமர்ந்தபடி, சதக் சதக் என வெறிதீர குத்தியுள்ளார். இந்த சத்தம் கேட்டு, வேதவள்ளி ஓடிவந்துள்ளார்.

மகன் சதீஷ், 'என்னை விட்டுவிடு அப்பா' எனக் கெஞ்சியுள்ளார். ஆனாலும், கொலை வெறி அடங்காத, சக்திவேல், மகனை கொன்றுவிட்டுத்தான் எழுந்தார். இதற்குள், வேதவள்ளியின் கூச்சல் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, சக்திவேலை மடக்கி பிடித்தனர்.

இதன்பின், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விரைந்து கொடூரன் சக்திவேலை கைது செய்தனர். சதீஷின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் வளசரவாக்கத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே தனதுமனைவிக்கும் தனது மகனுக்குமே தகாத உறவு இருப்பதாகவும், இதனால் தான் மகனை கொலை செய்ததாகவும் சக்திவேல் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளான்.