மனைவியுடன் குடும்பம் நடத்த முடியல..! அதான்..! 2 குழந்தைகளை துடிக்க துடிக்க கிணற்றில் தள்ளி கொன்ற தந்தை! அதிர்ச்சி காரணம்!

கடன் தொல்லையை சமாளிக்க இயலாத தந்தை பெற்ற மகள்களை கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவமானது கோவில்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகே அமைந்துள்ள என் ஜி ஓ காலனி எனும் இடத்தைச் சேர்ந்தவர் தாமஸ். இவருடைய மகனின் பெயர் டேவி குமார். இவருடைய வயது 36. அப்பகுதியில் உள்ள ஆர்டிஓ மையத்தில் வாகனங்களை பதிவு செய்து கொடுக்கும் தரகர் வேலையில் ஈடுபட்டு வந்தார்.

இவருக்கு மகாலட்சுமி என்ற 32 வயது மனைவி உள்ளார். இத்தம்பதியினருக்கு ஜெய்சத்யா(11) என்ற 5-ஆம் வகுப்பு படிக்கும் குழந்தையும், ஜெசிகா ராணி(9) என்ற 3-ஆம் வகுப்பு படிக்கும் குழந்தை என 2 மகள்கள் உள்ளனர். 

சமீபகாலமாக டேவி குமார் போதிய வருமானம் இன்றி தவித்து வந்தார். குடும்பம் நடத்துவதற்காக பல்வேறு இடங்களில் கடன் வாங்கிய குமார் அவற்றை செலவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் கடனை திருப்பி செலுத்த இயலாமல் டேவிட் குமார் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்குதலினால் கடந்த சில வாரங்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் இருவருமே வீட்டிலேயே வசித்து வந்தனர். 

நேற்று காலையில் தன்னுடைய மகள்களை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு வெளியே செல்ல புறப்பட்டுள்ளார். இந்த அமலில் உள்ளதால் பிரதான சாலை வழியாக செல்லாமல் ரயில்வே சுரங்கப்பாதை வழியாக தனியார் தோட்டத்திற்கு இருவரையும் அழைத்து சென்றுள்ளார். தோட்டத்திற்கு சென்று பின்னர் தண்ணீரில் குளித்து மகிழலாம் என்று எண்ணிய குழந்தைகளுக்கு பேரதிர்ச்சியே மிஞ்சியது.

குழந்தைகளை டேவிட் குமார் கிணற்றில் தள்ளிவிட்டார். சுமார் 40 அடி தண்ணீர் உள்ள கிணற்றில் குழந்தைகள் தத்தளித்து மிதந்தன. ஒரு கட்டத்திற்கு மேல் மனதை மாற்றிக்கொண்டு டேவிட் குமார் குழந்தைகளை காப்பாற்ற முயற்சித்தார், ஆனால் அவர் காப்பாற்றுவதற்கு முன்னரே குழந்தைகள் இறந்து போயினர்.

உடனடியாக டேவிட் குமார் நிகழ்ந்தவற்றை தன்னுடைய நண்பர் ஒருவரிடம் கூறிவிட்டு தலைமறைவானார். தகவல் அறிந்த கோவில்பட்டி காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 குழந்தைகளின் சடலங்களை மீட்பதில் களமிறங்கினர். சிறிது நேர விடா முயற்சிக்கு பின்னர் இருவரது சடலங்களும் கிடைத்தன. 

குழந்தைகள் கண் முன்னே இறந்து கிடப்பதை கண்ட உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் டேவிட் குமார் காவல்துறை அதிகாரிகளிடம் சரணடைந்தார். 2 குழந்தைகளே கொலை செய்த குற்றத்திற்காக அவரை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவமானது தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.