பெற்ற மகள் என்றும் பாராமல் மந்திரவாதியுடன் சேர்ந்து தந்தை செய்த நெஞ்சை உறைய வைக்கும் செயல்! புதுக்கோட்டை பயங்கரம்!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே எட்டாம் வகுப்பு படித்து வந்த சிறுமி காட்டுப்பகுதிக்குள் தண்ணீர் பிடிக்க சென்ற போது மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


இந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக தண்ணீர் பிடிக்க காட்டுக்குள் சென்ற பெண்ணை அவரது தந்தையே நரபலி கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த மாதம் 18ம் தேதி காட்டுப்பகுதியில் தண்ணீர் பிடிக்க சென்ற பெண் மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிறுமியின் பிரேத பரிசோதனை முடிவில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்று முடிவுகள் வெளியாகி இருந்தது. இதனால் இந்த வழக்கில் பெரும் குழப்பம் ஏற்பட்டு இருந்தது. இந்நிலையில் மகளை நரபலி கொடுத்தால் பெரிய பணக்காரன் ஆகலாம் என்று பெண் மந்திரவாதி ஒருவர் பேச்சைக் கேட்டு தந்தை பன்னீர்செல்வமே அவரின் மகளை நரபலி கொடுத்து கொன்றிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதன்காரணமாக உயிரிழந்த சிறுமியின் தந்தை பன்னீர்செல்வம் மற்றும் அவரது உறவினர் குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.