விபரீத நோயால் காதல் மனைவிக்கு ஏற்பட்ட விபரீதம்! மகனுடன் சேர்ந்து காதல் கணவன் எடுத்த பதற வைக்கும் முடிவு!

மனைவி இறந்த துக்கம் தாங்காமல், தந்தையே சொந்த மகனை கொலை செய்து, தானும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவமானது மதுரை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரையில் எஸ்.எஸ்.காலனி என்னும் பகுதி அமைந்துள்ளது இந்த பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவருடைய மனைவியின் பெயர் பாரதி. இத்தம்பதியினருக்கு சபா என்ற மகன் உள்ளார். 14 வயதான இவர் மாற்றுத்திறனாளியாவார். பாரதி பல ஆண்டுகளாக வாதநோயால் அவதிப்பட்டு வந்தார். சில மாதங்களுக்கு முன்னர் இவருக்கு கண்பார்வை இழப்பும் ஏற்பட்டுள்ளது.

மிகுந்த சிரமத்திற்கு நடுவில் தன் மனைவியை கார்த்திகேயன் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் பாரதி நோயால் அவதிப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சில நாட்களுக்கு கார்த்திகேயன் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். கார்த்திகேயன் திடீரென்று விபரீதமான முடிவொன்றை எடுத்தார். அவர் மாற்றுத்திறனாளியான தன் மகனின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் தன் சொத்துக்கள் அனைத்தையும் ஏழைகளுக்கு எழுதி வைத்து விடுமாறு உயில் எழுதியுள்ளார். 

உயில் எழுதி முடித்த பின்னர் கார்த்திகேயன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நெடுநேரம் கழித்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் காவல்துறையினர் கார்த்திகேயனின் வீட்டிற்கு சென்றுள்ளனர். மகா சபாவின் உடலையும், கார்த்திகேயனின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவமானது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.